⚫🇫🇷பிரான்ஸ் காவல்துறையின் அதிரடி! மூவர் படுகாயம்!

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 93 ஆம் மாவட்டத்தின் Stains நகரில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் , மகிழுந்து ஒன்றை சோதனையிடுவதற்காக சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஆனால் அவர்கள் காவல்துறையினரின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து பயணித்து தப்பிச் செல்ல முற்பட்டனர். அதன்போது காவல்துறை அதிகாரி ஒருவரை மகிழுந்தால் இடித்தும் தள்ளியுள்ளனர். இதனால் அவர்களை தடுத்து நிறுத்தும் முகமாக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். இதில் மகிழுந்தில் இருந்த இருவரும் காயமடைந்துள்ளனர்.


பின்னர் அவ்விருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். காயமடைந்த மற்றுமொரு அதிகாரியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இத்துப்பாக்கிச்சூடு தொடர்பாக, காவல்துறையினருக்கான காவல்துறையான IGPN அதிகாரிகள் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.