♦️🇫🇷பிரான்ஸ் காவல்துறையின் அதிரடி! பலருக்கு தண்டப்பணம்!

உள்ளிருப்பு விதிகளை மீறி செயற்பட்ட பலருக்கு காவல்துறையினர் தண்டப்பணம் அறவிட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை நள்ளிரவு பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் இரகசிய விருந்து ஒன்று இடம்பெற்றது. விதிகளை மீறி இந்த விருந்து இடம்பெற்றுள்ளது. இரவு 9 மணியில் இருந்து ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், நள்ளிரவில் விதிகளை மீறி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் விருந்தில் கலந்துகொண்ட பலருக்கு காவல்துறையினர் தண்டப்பணம் அறவிட்டுள்ளனர். விருந்து இடம்பெற்ற துல்லியமான இடத்தை காவல்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். 30 பேர் வரையானவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதோடு, ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.