🔴 🇫🇷 தற்போதைய செய்தி..!! காவல்நிலையத்தில் தீடீர் பதற்றம் …..!!

காவல்நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த ஒருவர் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டுள்ளார் இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை நண்பகல் Saint-Étienne நகர காவல்நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த காவல்நிலையத்துக்குள் திடீன நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த அதிகாரி ஒருவரை தள்ளி விட்டுள்ளார் உடனடியாக அவரை சூழ்ந்துகொண்ட காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி பிடித்தனர்.

அதன்போது அவர் ‘அல்லா ஹூ அக்பர்!’ என கோஷமிட்டார் 50 வயதுகளையுடைய குறித்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார் அவரிடம் ஆயுதங்கள் எதுவும் உள்ளதாக சோதிக்கப்பட்டது அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை மாறாக கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தார் எனவும் அதன் விளைவாகவே இவ்வாறு நடந்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.