🇫🇷பிரான்ஸில் வைத்தியர்களாக மாறிய காவற்துறை..!!!

பெண் ஒருவர் காவல்துறையினரின் உதவியுடன் குழந்தை பெற்றெடுத்துள்ளார் இச்சம்பவம் டிசம்பர் 31 ஆம் திகதி La Courneuve நகரில் இடம்பெற்றுள்ளது.

நிறைமாத கர்ப்பிணி ஒருவரும் அவரது கணவர் மற்றும் 2 வயது மகள் ஆகியோர் புதுவருட கொண்டாட்டத்தை காண சென்றுள்ளனர் அதன்போது குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி ஆரம்பித்துள்ளது.

உடனடியாக அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு அவர்களது வீடு அமைந்துள்ள நகரான Stains நோக்கி வேகமாக மகிழுந்தில் சென்றுள்ளனர் அதிவேகமாக பயணித்த அவர்களது மகிழுந்தை பார்த்த La Courneuve நகர காவல்துறையினர் பின்னால் துரத்திச் சென்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போது சூழ்நிலையை காவல்துறையினர் அறிந்துகொண்டனர் அப்பெண்ணை Pitié-Salpêtrière மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் தீர்மானித்தனர்.

ஆனால் அதற்குள்ளாக அப்பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாகி குழந்தை பிறக்க தயாரானது பின்னர் காவல்துறையினர் உதவியோடு அப்பெண் அதிகாலை 5:24 மணிக்கு குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

அதன் பின்னர் தாயும் சேயும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் இருவரும் பூரண நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.