♦️🇫🇷பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! படுகாயமடைந்த சகோதரர்கள்!

பரிசில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் இரு சகோதர்கள் படுகாயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. காலை 8.30 மணி அளவில் Place de l’Aphithéâtre பகுதியில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றதை அடுத்து, சம்பவ இடத்துக்கு உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டனர். காயமடைந்த இருவரும் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.