🇫🇷பிரான்ஸில் காவற்துறையினருக்கு சரமாரியாக கல்வீச்சு…!!! பதில் தாக்குதலை நாடாத்திய காவற்துறை..!!

பிரான்ஸின் Pantin நகரில் காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாலை 4 மணி அளவில் வீதி கண்காணிப்பில் சில காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளத கற்கள் வீசியும், கண்ணாடி போத்தல்கள், சிறிய போத்தல்கள் போன்றவற்றை மகிழுந்துகள் மீது வீசியுள்ளனர்.

பதிலுக்கு காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர் தாக்குதல் நடத்திய நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்இந்த தாக்குதல் சம்பவம் பலரால் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.