🇫🇷😲பிரான்ஸில் ஊரடங்கை ஏற்கமறுத்த கிராமம்! வெளிவந்த காரணம்!

தற்போது நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கை பிரெஞ்சு கிராமம் ஒன்று ஏற்க மறுத்துள்ளது. அத்தோடு எவ்வித கட்டுப்பாடுகளும் இன்று மிக இயல்பாக அக்கிராமம் செயற்பட்டு வருகின்றது. Saint-Brieuc (Côtes-d’Armor) எனும் சிறு கிராமமே இந்த கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்துள்ளது.

குறிப்பாக நேற்று முதல் நடைமுறைக்கு வந்த மாலை 6 மணி முதல் இரவு நேர ஊரடங்கு எனும் சட்டத்தை முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக இக்கிராமத்தின் நகர முதல்வர் Hervé Guihard தெரிவிக்கும் போது, மக்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஓரளவு சுதந்திரத்தை நாம் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். குழந்தைகளை அழைத்துச் செல்லவும், பொருட்கள் கொள்வனவு செய்யவும் மேலும் சில மணிநேரங்கள் கடைகள் திறந்திருக்கவும் நாம் அனுமதித்துள்ளோம்! என தெரிவித்தார். அதேவேளை, இக்கிராமத்தில் கடந்த கடந்த டிசம்பரில் ஒவ்வொரு 100.000 பேருக்கும் 37 பேருக்கும், இம்மாத ஆரம்பத்தில் ஒவ்வொரு 100.000 பேருக்கும் 60 பேருக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால் குறித்த கிராமம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.