⚫🇫🇷பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! மருத்துவமனை ஊழியர் குத்திக் கொலை!!!

மருத்துவமனையின் துப்பரவுப் பணியாளர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். Clichy-la-Garenne (Hauts-de-Seine) இலுள்ள Beaujon மருத்துவமனையின் துப்பரவுப் பணியாளரான 33 வயதுடைய நபர், தனது வேலை முடிந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் தருணத்தில் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் 20h00 அளவில் நடந்துள்ளது. உடனடியாக மருத்துவர் குழு அவசரசகிச்சை வழங்கியும் பலனில்லாமல் சம்பவ இடத்திலேயே இவர் சாவடைந்துள்ளார்.

இது அங்கு பணிபுரிபவர்களிற்கு இது இபரும் அதிர்ச்சியை அளித்திருப்பதால் அங்கு ஒரு உளவியல் ஆற்றுப்படுத்தல் மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அரசினர் வைத்தியசாலைகளான AP-HP (Assistance Publique – Hôpitaux de Paris) தெரிவித்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், கொலைக்கான விசாரணைகளை பிராந்தியக் காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.