🇫🇷பிரான்ஸில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி…! புதியவகை தடுப்பு மருந்து நாளை மறுதினம் !

கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பு மருந்து வரும் திங்கட்கிழமை பிரான்சை வந்தட்டையும் என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

Moderna என அழைக்கப்படும் இந்த புதிய மருந்தினை பயன்படுத்த நேற்று வெள்ளிக்கிழமை Haute autorité de santé (HAS) அனுமதி அளித்திருந்தது.

அதைத் தொடருந்து வரும் திங்கட்கிழமை ஜனவரி 11 ஆம் திகதி குறித்த மருந்து பிரான்சை வந்தடையும் எனவும் கொரோனா நோயாளிகளுக்கு அந்த மருந்து போடப்படும் எனவும் சற்று முன்னர் சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார்.

மேலும இவ்வார இறுதியில் மொத்தமாக 100.000 பேருக்கு தடுப்பு மருந்துகள் போடப்பட்டிருக்கும் எனவும் சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார் இதனால் மக்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.