🔘🇫🇷பிரான்ஸ் ஜனாதிபதியால் அதிரடியாக கூட்டப்பட்ட சுகாதார பாதுகாப்பு சபை!

இன்று புதன்கிழமை வழமைபோல் சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைச் சபையை, ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் கூட்டி உள்ளார்.

கல்வியாண்டு ஆரம்பம், சுகாதாரப் பாதுகாப்பு, பிரான்சின் தீவகங்களின் கொடும் தொற்று, கொரோனாத் தடுப்பு ஊசி, போன்றவற்றை ஆலோசிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பம், மற்றும் பல்கலைக்கழகங்களின் அனைத்து மாணவர்களையும் உள்வாங்குவது போன்றவை மிகவும் ஆபத்தானது என, தொழிற்சங்கங்களும், வைத்தியர்களும் எச்சரித்துள்ளமை குறித்தும் ஆய்வு செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.