🔴🇫🇷பிரான்ஸ் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம்!

காலில் சிமெந்து கட்டியுடன் இருந்த சடலம் ஒன்று குளத்தில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை Rennes நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Apigné எனும் குளத்தில் இருந்து 30 வயதுகளையுடைய ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். அவரது காலில் சிமெந்து கொண்டு ‘பாரமான’ ஒரு கொன்கிரீட் கட்டி அமைக்கப்பட்டு அதன் பின்னர் அவர் குளத்தில் வீசப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், முதற்கட்டமாக சடலத்தை உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்துள்ளார். அதன் முடிவுகளை அடுத்து சடலம் அடையாளம் காணப்பட்டதும், மேலதிக விசாரணைகள் தொடரும் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.