⚫🇫🇷பிரான்ஸில் மீண்டும் குண்டுவெடிப்பா! நடந்தது என்ன?

மிகவும் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு ஒன்று இன்று காலை போர்தோ (Bordeaux) நகர மத்தியில் வெடித்துள்ளது. போர்தோவின் நகரத்தின் மத்திய பகுதிக்கு அருகாமையில் உள்ள Chartrons பகுதியில் வெடித்த குண்டு போர்தோ நகரத்தையே அதிர வைத்துள்ளது.
இது ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடித்த இடத்தில் மூவர் காயங்களிற்கு உள்ளாக, இருவரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி விரைவாக நடக்கின்றது. மேலதிகத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை!!