⚫🇫🇷பாரிஸ் மக்களே அவதானம்! வெளியான முக்கிய தகவல்!

இவ்வாரத்தில் பரிசில் கடும் உறை குளிர் ஆரம்பிக்கின்றதாக Météo France தகவல் வெளியிட்டுள்ளது. பரிசில் ஏற்கனவே 3°C இல் இருந்து 5 °C வரை குளிர் நிலவுகின்றது. குறிப்பாக அதிகாலையில் 1°C வரை பதிவாகின்றது.

இந்நிலையில், இவ்வாரத்தில் 0°C இல் இருந்து -4°C வரை குளிர் நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளிர் இவ்வார இறுதி வரை நீடிக்கும் எனவும், ‘சில இடங்களில் பனிக்கட்டிகளை காணக்கூடியதாகவும் இருக்கும்!’ எனவும் Météo France தெரிவித்துள்ளது.

1890 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி பரிசில் -14°C எனும் கடும் குளிர் நிலவியிருந்ததை Météo France சுட்டிக்காட்டியுள்ளது.