⚫🇫🇷பிரான்ஸ் மக்களே எச்சரிக்கை! நேரமாற்றம் நள்ளிரவிற்கும் அதிகாலைக்கும் இடையில்!

அவதானம் இன்று நள்ளிரவிற்குப் பின்னர், சரியாக நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோடைகால நேர மாற்றம் நடைபெறும். அதிகாலை சரியாக 2h00 மணிக்கு, ஒரு மணித்தியாலம் கடிகாரத்தில் சேர்க்கப்பட்டு, அது 3h00 மணியாக மாறும்.

இதனால் இன்று இரவு நித்திரையில், நாம் ஒரு மணித்தியாலத்தை இழக்க உள்ளோம். வழமை போல், மார்ச் மாத இறுதியில், 27ம் திகதிக்கும் 28ம் திகதிக்கும் இடைப்பட்ட இரவில், இந்த நேரமாற்றம் நிகழ்கின்றது. ஒவ்வொரு முறையும் இது கடைசி முறை என்று சொல்லப்பட்டு, இந்த நேர மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.