⚫🇫🇷புதிய திரிபு வைரஸ்ஸால் கலங்கி நிற்கும் பிரான்ஸ்!

புதிய திரிபு வைரஸ் ஒன்று Hauts-de-France மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ‘கொலம்பியா’ (Colombian) திரிபு வைரசே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த திரிபு வைரஸ் தற்போது 30 நாடுகளுக்கு பரவியுள்ளது. பிரான்சில் ஏற்கனவே 50 பேருக்கும் அதிகமானோருக்கு இந்த திரிபு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது Hauts-de-France மாகாணத்திலும் இந்த தொற்று பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

B.1.621 என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கொலம்பியா வைரஸ் முதன் முறையாக இவ்வருடத்தின் ஜனவரியில் கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரான்சில் ஜூன் மாதத்தில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வேகமாக பரவிவரும் திரிவு வைரசாக மாறியுள்ள இந்த கொலம்பியா வைரஸ், முதன்முறையாக Hauts-de-France மாகாணத்தில் கண்டறியப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் பிரான்சில் கண்டறியப்பட்டும் வைரஸ்களில் 98.32% வீதமானவை ஆபத்தான டெல்டா திரிபு என்பது குறிப்பிடத்தக்கது.