🇫🇷பிரான்சில் தடுப்பூசி போடச்சென்றவர்களுக்கு ஏமாற்றம் ….!!! தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடா…!!

பிரான்சுக்குள் அமைக்கப்பட்டுள்ள பல கொரோனா சிகிச்சை மையங்கள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன கொரோனா தடுப்பூசிகளின் தட்டுப்பாடுகளால் இந்த நிலையங்கள் மூடப்பட்டும் முன் பதிவுகளை நிறுத்தியும் உள்ளனர்.

குறிப்பாக centre de vaccination de Garches நிலையத்தில் இவ்வாரத்தில் 1.300 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுவதாக முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அங்கு வெறுமனே 420 பேருக்கான தடுப்பூசிகளே கிடைத்துள்ளன.

Rueil-Malmaison தடுப்பூசி நிலையம் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் மூடப்பட்டுள்ளது முன் பதிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன saint Denis தடுப்பூசி நிலையத்தில் சேவைகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் நிலவுவதால் இந்த நிலையங்களில் எல்லாம் முன்பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை ஜனவரி மாத இறுதிக்குள் மிகப்பெரிய எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.