⚫🇫🇷பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிக்கவுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அடுத்த வாரம் மார்செ நகருக்கு பயணமாகின்றார். மார்செயில் கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவி வருகின்றது. நான்காவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மார்செ உள்ளது.

வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கின்ற நிலையில், அன்றைய தினம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அங்கு பயணமாகின்றார். மார்செ மாவட்டத்தில் மாத்திரம் நடைமுறைக்கு வரும்படி சில முக்கிய கட்டுப்பாடுகளை அங்கு ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சில மில்லியன் யூரோக்கள் நிதி உதவியும் குறித்த மாவட்டத்துக்கு வழங்க உள்ளதாகவும் அறியமுடிகிறது. பாடசாலைகளில் சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள், பகுதிநேர வகுப்புகள் போன்ற சில கட்டுப்பாடுகளை மக்ரோன் அறிவிப்பார் என அறிய முடிகிறது.