⚫🇫🇷பிரான்ஸ் இளைஞர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை! மக்ரோனின் அதிரடி அறிவிப்பு!

18 வயது இளையோர் சகலருக்கும்
300 ஈரோ அடங்கிய ‘கலாசாரப் பாஸ்’ ரிக்ரொக் தளத்தில் மக்ரோன் தகவல்

பிரான்ஸில் 18 வயதை எட்டும் இளை யோர் அனைவருக்கும் 300 ஈரோக்கள் பெறுமதியான ‘கலாசாரப் பாஸ்’ (Pass culture – Culture Pass) வழங்கப்படவுள்ளது.
18 ஆவது பிறந்த நாளைக் கடக்கின்ற சகலருக்கும் – அவர்களது குடும்ப வருமான நிலைவரம் எதனையும் கணக்கில் கொள்ளாமல் – கலாசாரப் பாஸ் கிடைக்கும்.

நாட்டின் சில பகுதிகளில் இது போன்ற கலாசாரப் பாஸ் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அது தற்சமயம்
நாடு முழுவதுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.

அரசுத் தலைவர் மக்ரோன் இத்தகவலைஇன்று இளையோரைக் கவரும் தனது “ரிக்ரொக்” (TikTok) சமூகவலைத் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

சினிமா, இசை நிகழ்ச்சிகள், கல்விக் கண்காட்சி, இன்னிசை அரங்குகள், அருங்காட்சியகங்கள் போன்ற கலாசார
இடங்களுக்கான நுழைவுச் சீட்டுக்கள், புத்தகங்கள், கலை, சித்திரம் சம்பந்த மான பொருள்கள், கல்விக்கான டிஜிட்டல் சாதனங்கள் போன்ற தேவைகளுக்கு
கலாசாரப் பாஸைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை முதல் தங்கள் பதினெட்டாவது பிறந்ததினத்தைச் சந்தி
க்கின்ற எவரும்https://app.pass culture. beta.gouv.fr/ என்னும் அரசாங்க இணையத் தளம் ஊடாகப் பதிவு செய்து கலாசாரப் பாஸைப் பெற்றுக்கொள்ள
முடியும். அதனை அவர்கள் அடுத்துவருகின்ற 24 மாதங்களுக்குள் பயன்படுத்த
லாம்.பிரான்ஸில் ஆண்டு தோறும் 800,000 இளையவர்கள் வரை 18 வயதை அடைகின்றனர்.