♦️🔴🇫🇷பிரான்ஸில் 12 வயதில் இருந்து தடுப்பூசி! திகதியை அறிவித்த மக்ரோன்!

12 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போட ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கையில், இதை நாம் இன்று காலை தீர்மானித்தோம். வரும் ஜூன் 15 ஆம் திகதியில் இருந்து பதின்மவயதுடையோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. 12 வயதில் இருந்து 18 வயதுடையோருக்கு தடுப்பூசிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன! என ஜனாதிபதி தெரிவித்தார். பதின்மவயதுடையவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.