🇫🇷ஜனாதிபதி மக்ரோனின் உடல்நிலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

எமானுவல் மக்ரோனின் உடல்நிலை குறித்து, இன்று ஜனாதிபதி மாளிகையான எலிசே அறிக்கை வெளியிட்டுள்ளது. எமானுவல் மக்ரோனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், நேற்று சனிக்கிழமையை விட இன்று முன்னேற்றம் எற்பட்டுள்ளதாகவும் எலிசே தனது சிறு அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில், மேலதிகத் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்பட இல்லை. இவர் தற்போது வேர்செய் (Versailles) நகரில் உள்ள அதிகாரபூர்வ தங்கிடமான La Lanterne இல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போதும் களைப்பு, உடல்வலி, இருமல் என கொரோனாவின் பாதிப்பிலேயே உள்ளார் எனவும், இருப்பினும் இவரின் உடல்நிலை மிகவும் சீராகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.