🇫🇷சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மக்ரோனின் சிலை! வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் இரத்தச்சிவப்பிலான சிலை ஒன்று பரிசில் அமைக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தின் முதல் நாளானா நேற்று திங்கட்கிழமை டிசம்பர் 21 ஆம் திகதி இந்த சிலை, பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வீடற்றவர்கள் பயன்படுத்தும் கூடாரம் ஒன்றின் அருகே ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அமர்ந்திருப்பது போல் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சிலை இரத்த சிவப்பில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதனை James Colomina எனும் கலைஞர் உருவாக்கியுள்ளார். வீடற்றவர்களை அரசு கைவிடுகின்றது. இதனை கண்டித்து இந்த சிலையை நான் நிறுவியுள்ளேன்! என அவர் தெரிவித்தார். Toulouse நகரைச் சேர்ந்த குறித்த கலைஞர் நாடு முழுவதும், பல வீதிகளில் இதுபோன்ற சிவப்பு நிற சிலைகளை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.