♦️🇫🇷பிரான்ஸில் மெதுவாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

கடந்த 24 மணிநேரத்திற்குள் 74 பேர் கொரோனாவால் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 110.344 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்திற்குள் 3.871 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தொற்றாளரர்களின் எண்ணிக்கை 5.733.838 ஆக உயர்ந்துள்ளது. வைத்தியசாலைகளில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 83.841 (+68 ) ஆக அதிகரித்துள்ளது. முதியோர் இல்லங்களில் 26.434 (+5) பேர் சாவடைந்துள்ளனர். 12.712 பேர் கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.163 ஆக உள்ளது.