⚫🇫🇷பிரான்ஸின் இன்றைய கொரோனா சாவு நிலவரம்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 62 பேர் சாவடைந்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தின் பின்னர் பதிவாகும் மிக குறைந்த அளவு சாவு எண்ணிக்கை (ஒரு நாளில்) இதுவாகும்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 70 பேர் சாவடைந்திருந்தனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை 89 பேர் சாவடைந்திருந்தனர். இந்நிலையில், இன்று மே 24 ஆம் திகதி திங்கட்கிழமை 62 பேர் சாவடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.