⚫🇫🇷பிரான்ஸில் மீண்டும் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 212 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர். ஐந்தாம் தொற்று அலை ஆரம்பித்ததில் இருந்து நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய சாவு எண்ணிக்கை இதுவாகும்.

மருத்துவமனைகள் நெருக்கடியை நோக்கி சென்றுகொண்டுள்ளன. தற்போது 16, 067 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3,096 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 171 பேர் இந்த 24 மணிநேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 212 பேர் சாவடைந்துள்ளதை அடுத்து, இதுவரை கொரோனா வைரசினால் சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 121,705 பேராக அதிகரித்துள்ளது.