🔴🇫🇷பிரான்ஸில் வீழ்ச்சியடையும் கொரோனா மரணங்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் மிக மிக குறைவான மரணங்களே பதிவாகியுள்ளன. நேற்று சனிக்கிழமை 36 பேர் சாவடைந்திருந்த நிலையில், இன்று இந்த சாவு எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. சற்று முன்னர் வெளியான தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 13 பேர் மாத்திரமே சாவடைந்துள்ளனர்.

Santé Publique France இத்தகவலை வெளியிட்டுள்ளது.
தற்போது 12.480 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் 111 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2106 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.