🇫🇷பிரான்ஸில் இருவர் பரிதாப மரணம்!

பனிச்சரிவில் சிக்கி இருவர் சாவடைந்துள்ளனர். மேலும் ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் Monétier-les-Bains (Hautes-Alpes) எனும் சிறு நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு பனிச்சறுக்கு விளையாட்டில் ஆறு பேர் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பாரிய பனிச்சரிவு ஏற்பட்டு, அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். மலைப்பகுதி ஜொந்தாமினர் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆறு பேரும் மீட்க்கப்பட்டிருந்த போதும், அவர்களில் இருவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.