🇫🇷பிரான்ஸ் ஜோந்தார்மினரிடமிருந்து இருந்து தப்பியவர்கள் பலி!

ஜோந்தார்மினரின் வீதிச் சோதனையில் இருந்து தப்பித்த 32 மற்றும் 39 வயதுடைய இருவர் சாவடைந்துள்ளனர். இன்று அதிகாலை 2h30 அளவில் எசொன்னில் (Essonne) உள்ள plateau de Guinette குடியிருப்புப் பகுதியில் அதிவேகத்தில் சந்தேகத்திற்கிடமாகச் சென்ற ஒரு சிற்றுந்தை ஜோந்தார்மினர் சோதனை செய்வதற்காக மறித்தபோது, அதற்கிணங்காமல் அதிவேகத்தில் சென்றுள்ளது.

ஜோந்தார்மினரிடம் இருந்து தப்பித்த இந்தச் சிற்றுந்தின் சாரதியும் மற்றொருவரும் சிற்றுந்தில் , வாகனங்கள் வரும் நேர்
எதிர்த்திசையில் அதிவேகத்தில் சென்றபோது, அங்கு நேரெதிரில் வந்த பார ஊர்தியுடன் மோதி உள்ளனர். அந்த இடத்திலேயே இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் போதைப் பொருட் கடத்தல் குற்றங்களிற்காக ஏற்கனவே காவற்துறையினரின் தேடுதற் பட்டியலில் உள்ள குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.