⚫🇫🇷கொரோனா மருந்தை ஏற்கமறுத்த பிரான்ஸ்!

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் குளிசை வடிவ மருந்துகளை, Merck அமெரிக்க எனும் நிறுவனத்திடம் இருந்து வாங்கும் முடிவை பிரான்ஸ் கைவிட்டுள்ளது.

இந்த நிறுவனம் தயாரிக்கும் குளிசை வடிவிலான மருந்துகளை ஆய்வு செய்து பார்த்தபோது, அவை மிகவும் வீரியம் குறைந்தவை என்றும் கொரோனா வைரசை எதிர்பார்த்த அளவில் கட்டுப்படுத்தும் திறன் அற்றவை என்றும் Autorité de santé அறிவித்துள்ளது.


இந்த அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து ஐந்து இலட்சம் குளிசைகளை வாங்கும் ஒப்பந்தம் ஒன்றில் பிரான்ஸ் ஈடுபட்டிருந்தது. இருப்பினும் இறுதிநேரத்தில் தன் முடிவை பிரான்ஸ் கைவிட்டுள்ளது. முன்னதாக Molnupiravir எனும் நிறுவனத்துடன் செய்யப்பட்டிருந்த இதுபோன்ற ஒப்பந்தம் ஒன்றை, கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி, Autorité de santé நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.