⚫🇫🇷பிரான்ஸ் அரசின் திடீர் முடிவு! தீவகங்கள் நோக்கி மருத்துவதாதிகள்!

இன்று காலை, சார்சல் நகரத்தின் கொரோனாத் தடுப்பூசி மையத்திலிருந்து, 33 மருத்துவத் தாதிகள், பிரான்சின் தீவகப் பிராந்தியங்களான, மார்த்தினிக் மற்றும் குவாதிலூப் நோக்கிப் பயணப்பட்டுள்ளனர். இந்த இரண்டு இடங்களிலும் கொரோனாத் தொற்று உச்சமடைந்துள்ளது.

தீவிர உள்ளிருப்பு இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இங்குள்ளவர்களிற்கான கொரோனாத் தடுப்பு ஊசிகளை விரைவு படுத்துவதற்காகவே இந்த மருத்துவத் தாதிகள் அனுப்பப்பட்டுள்ளனர். இதில், மருத்துவத் தாதிகளிற்கான பயிற்சிக் கல்லூரியின் இளம் மாணவ மாணவிகள் பலரும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய மோசமான நிலையில் நாங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருக்க முடியாது. இதனாலேயே நாங்கள் உதவிக்காகச் செல்கின்றோம் என இந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.