⚫🇫🇷பிரான்ஸ் அரசின் அதிரடி! உடனடி மருத்துவ காப்பீடு!

பிரான்சிற்காக வேலை செய்த, பிரான்சிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, ஆப்கானிஸ்தான் பிரஜைகளிற்கு, வழைமையான மூன்று மாதக் காத்திருப்பு இன்றி, உடனடியாக சமூக மருத்துவக் காப்புறுதியை (Assurance maladie – Sécurité sociale) வழங்குமாறு, தேசிய சுகாதாரக் காப்பீட்டு நிதியின் நிதி இயக்குநரிற்கு (directeur des finances de la Caisse nationale de l’Assurance maladie) பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் ஆணையிட்டு, கடிதம் அனுப்பியுள்ளார்.

தலிபான்களின் பிடியில் இருந்து தப்பி வந்திருக்கும் இவர்களின் வறுமை நிலை மற்றும், அவசர சகாதார நிலைமைக்காக, சுகாதார அமைச்சர் இந்த ஆணையை வழங்கி உள்ளார். பிரான்சிற்குள் விமானங்கள் மூலம் ஆப்பானிஸ்தானில் இருந்து, ஆப்பாகனிஸ்தான் பிரஜைகள் 2600 பேர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் பிரான்சின் இராணுவத்தினருடனும், தூதரகத்தின் இராஜாங்க மற்றும் இராஜதந்திரப் பணிகளிற்காகவும் வேலை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.