⚫🇫🇷பிரான்ஸ் மருத்துவர் அதிரடி கைது! வெளியான காரணம்!

போலி சுகாதார அட்டைகளை (Pass sanitaire) விற்பனை செய்த மருத்துவர் ஒருவர் Val-de-Marne மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை குறித்த மருத்துவர், Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

56 வயதுடைய குறித்த மருத்துவர் போலியாக தயாரிக்கப்பட்ட சுகாதார அட்டைகளை விற்பனை செய்துள்ளார். அட்டை ஒன்று 1,000 யூரோக்கள் படி மொத்தமாக 220 அட்டைகள் விற்பனை செய்துள்ளார்
மருத்துவருடன், 53 வயதுடைய பெண் ஒருவரும், 49 வயதுடய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருமே இந்த சட்டவிரோத செயலில் ‘முகவர்களாக’ செயற்பட்டுள்ளனர்.


அத்தோடு மருத்துவரின் அலுவலகம் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டது. அதன்போது €600,000 யூரோக்கள், போலி PCR அறிக்கைகள் மற்றும் 50 வங்கி கணக்குகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.