🇫🇷💡பிரான்ஸ் மின்சார கட்டணத்தில் இன்று முதல் ஏற்படும் அதிரடி மாற்றம்!

இன்று பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து மின்சார கட்டணத்தில் விலை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 1.6 % வீதத்தால் கட்டணம் அதிகரிக்கின்றது. இந்த கட்டண அதிகரிப்பினால் வீடு ஒன்று வருடத்துக்கு 15 யூரோக்கள் கட்டணம் மேலதிகமாக செலுத்த நேரும் என Commission de régulation de l’énergie தெரிவித்துள்ளது.

மின்சாரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்காகவே இந்த மின்சார கட்டண அதிகரிப்பு கொண்டுவரப்படுகின்றதாக்க ministère de la Transition écologique அமைச்சகம் தெரிவித்துள்ளது. மிக குறிப்பாக கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக அணு உலைகளை பராமரிப்பதில் எழுந்துள்ள பல்வேறு விதமான சிக்கல்களை அடுத்தே இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.