⚫🇫🇷பிரான்ஸில் முடக்கப்பட்ட நகரங்கள்! விபரம் உள்ளே!

தற்போது ANTI-PASS SANITAIRE ஆர்ப்பாட்ங்கள் பிரான்சின் பல நகரங்களில் ஆரம்பித்துள்ளன. இதனால் பல நகரங்களின் பெருவீதிகள் முடக்கப்பட்டுள்ளன.
பரிஸ் தாண்டி மற்ற பல நகரங்களின் விபரத்தினைப் பார்ப்போம்.

மொன்பெலியே (Montpellier)

place de la Comédie யில் பெருந்திரளாகக் கூடி உள்ளனர். இங்கு மருத்துவத் தாதிகள் தாங்கள் தொற்றுக்காலத்தில் படும் துன்பங்களை ஒலிபெருக்கியில் விளக்கியிருந்தும், அதனைக் கேளாமல் சுகாதார அனுமதிப்பத்திரத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்த்தில் நேரடியாக ஜனாதிபதி எமானுவல் மக்ரோனைத் தாக்கும், குற்றம் சாட்டும் பதாதைகள் பெருமளவில் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை இங்கு 9.500 பேர் கூடியமை குறிப்பிடத்தக்கது.

தூலோன் (Toulon)

இங்கு 500 இலிருந்து 700 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இங்கு 6.000 பேர் கூடியமை குறிப்பிடத்தக்கது

Morlaix (Finistère)

இங்கு நூறிற்கும் குறைவானவர்கள் கூடி மனிதச் சங்கிலியை உருவாக்கி உள்ளனர்.

நீசில் பெரும் வீதி முடக்கம் (Nice)

நீசில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கூட ஆரம்பித்துள்ளனர். place Garibaldi இற்கான பாதைகள் முடக்கப்பட்டுள்ளன. ‘தயக்கம் வேண்டாம் – இதுதான் புரட்சி’ என்ற கோசங்கள் இங்கு எழுப்பப்பட்டுள்ளன.