⚫🇫🇷பிரான்ஸில் விரைவான கொரோனா பரிசோதனை! போலி முகவர் கைது!

15 யூரோக்கள் கட்டணத்தில் கொரோனா பரிசோதனைகள் விரைவாக மேற்கொண்டு தருவதாக மோசடி செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மார்ச் 18 ஆம் திகதி குறித்த நபர் பரிசில் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான விசாரணைகள் இவ்வாரத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரபல கொரோனா ஆய்வுகூடம் ஒன்றில் ‘மிக விரைவாக’ கொரோனா பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள, 15 யூரோக்கள் கட்டணத்தை குறித்த நபர் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால் அவர் ஒரு போலியான முகவர் எனவும், அதுபோன்று விரைவாக அவரால் கொரோனா முடிவுகளை பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் தெரியவந்துள்ளது. குறித்த நபர் ஆய்வுகூடம் ஒன்றினது பெயரை பயன்படுத்தியிருந்த நிலையில், அவர்களே இது தொடர்பான புகாரினை காவல்துறையினரிடம் அளித்திருந்தனர்.