🇫🇷பிரான்ஸ் முதியவருக்கு ஏற்பட்ட துயரம்! எச்சரிக்கை பதிவு!

Asnières-sur-Seine (Hauts-de-Seine) இல் வசிக்கும் 90 வயதுடைய முதியவர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. 50.000€ பெறுமதியான பணமும் நகையும் கொள்ளையிடப்பட்டுள்ளன. முகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள் இரண்டு தானியங்கிப் பிஸ்டல்களுடன், உள் நுழைந்து, முதியவரைக் கட்டி வைத்து விட்டு கொள்ளையை நடாத்தி உள்ளனர். முதியவரைப் பலமாகத் தாக்கி, நிலத்திலும் வீழ்த்தி விட்டுள்ளனர். அவரது பாதுகாப்பு இரும்புப் பெட்டகத்தினை (coffre-fort) கொள்ளையர்கள் லாவமாகத் திறந்துள்ளனர். அதிலிருந்த 50.000€ பெறுமதியான பணம் மற்றும் நகை உட்பட அனைத்தும் கொள்ளையிடப்பட்டுள்ளன. முதியவரின் சிற்றுந்தையும் திருடி, அதிலேயே தப்பியும் சென்றுள்ளனர்.

பிராந்திய விசாரணைக் காவற்துறையினரான SDPJ 92 (service départemental de la police judiciaire கொள்ளையர்களைத் தேடும் முயற்சியில் திவிரமாகக் களம் இறங்கி உள்ளனர். வீடுகளில் உள்ள முதியவர்கள், தனியாக இருக்கும் சமயங்களில், மிக அவதானமாக, யார் என்று அறிந்தே கதவைத் திறப்பது பாதுகாப்பானது.