🔴🇫🇷பிரான்ஸ் ஜனாதிபதி செய்வது பிழை! கடுமையாக விமர்சிக்கும் பாரிஸ் நகரபிதா!

பிரான்சின் ஜனாதிபதி, கொரோனாவைக் கையாளும் முறை மிகவும் தவறானது என, இன்று Europe 1 இற்குச் செவ்வியளித்த பரிசின் மாநகரபிதா அன் இதால்கோ தெரிவித்துள்ளார். ஒரு பெருந்தொற்றைக் கையாளப் போர் செய்வது போல் கையாளுவது, தவறு. மாறாக் இது பற்றிய வெளிப்படையான தகவல்களை மக்களிற்கு வழங்கவேண்டும். தொடர்ச்சியாக மிக அதிகமான கொரோனாத் தடுப்பு ஊசிகளைப் போட வேண்டும். ஆனால் எமானுவல் மக்ரோன் கொரேனாத் தொற்றைக் கையாள்வது மிகவும் தவறாக உள்ளது. என அன் இதால்கோ தெரிவித்துள்ளார்.