🔴🇫🇷🚆பிரான்ஸில் இரண்டுமாதங்களுக்கு மூடப்படும் மெற்றோ நிலையம்!

பரிசில் உள்ள முக்கிய மெற்றோ நிலையமான la station Jourdain நிலையம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மூடப்பட உள்ளது. 11 ஆம் இலக்க மெற்றோ சேவைகளின் விரிவாக்க பணிகளை அடுத்தே இந்த நிலையம் மூடப்படுகின்றது. பெப்ரவரி 2 ஆம் திகதி இன்று முதல் இந்த நிலையம் மூடப்படுவதாக தொடருந்து நிறுவனமான RATP அறிவித்துள்ளது.

விரிவாக்க பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி திறக்கப்படும் எனவும், இந்த 11 ஆம் இலக்க மெற்றோ விரிவாக்கல் பணி Rosny-Bois-Perrier (Seine-Saint-Denis) நிலையம் வரை விஸ்தரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.