🔴🇫🇷பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்! ⚫15.03.2021⚫

கொரோனா தொற்றின் காரணமாக இன்று பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 333 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 90,762 பேர் பிரான்சிலும் உலகம் முழுவதும் 2.65 மில்லியன் பேரும் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர்.

இல் து பிரான்சுக்குள் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 6,471 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது 4.129 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 92 பேரால் அதிகமாகும்.

அதேவேளை 25.469 பேர் மருத்துவமனைகளில் சாதாரண சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை நேற்றைய நாளில் 24.989 பேராக இருந்தது. இல் து பிரான்சுக்குள் ஒவ்வொரு 100.000 பேருரிலும் 400 பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.