பிரான்சில் நாளிற்கு நாள் அதிர்ச்சிக்குரிய விதமாக அதிகரித்து 100.000 பேரிற்கு 309,75 பேர் என்ற விகிதத்தில் கொரோனாத் தொற்று விகிதம் (Taux d’incidence) உச்சமடைந்துள்ளது. இந்த விகிதம் 200 இனைத் தாண்டினாலே, அது கடுமையான எச்சரிக்கை நிலை என்பது குறிப்பிடத்தக்கது. இல்-து-பிரான்சில் மட்டும் இது 550 இனைத் தாண்டி உள்ளமை ஆபத்தின் பேரச்சமாக உள்ளது. செய்ன்-சன்-துனியில் இது 7000 இனை எட்டி உள்ளது.
கொரோனாத் தடுப்பூசியில் கவனம் செலுத்தும் அரசாங்கம், கொரோனப் பரிசோதனையில் அக்கறை காட்டாமையினால் தொற்று எண்ணிக்கைள் குறைவாகக் காட்டப்படுகின்றன. இன்றைய தொற்றெண்ணிக்கையை வழங்காமலே அரசாங்கம் கடந்து சென்றுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், 248 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவால் சாவடைந்தவர்கள் தொகை 93. 156 ஆக உயர்ந்துள்ளது. வைத்திசாலைகளில் மட்டும் 67.748 பேர் சாவடைந்துள்ளனர். 26.876 நோயாளிகள் கொரேனாத் தொற்றின் தீவிரத்தினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 2130 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் மட்டும் கடந்த 24 மணிநேரத்திற்குள் 384 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளாந்தம் தொடர்ச்சியாக அதிகரித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிராபத்தான நிலையில் 4.651 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!