⚫🇫🇷பிரான்ஸ் அரசின் முடிவுகள் கொரோனாவை கட்டுப்படுத்தாது! மருத்துவ நிபுணர்!

முதலாவது, மற்றும் இரண்டாவது அலைகளை விட மிகவும் மோசமான ஒரு நிலைமையைச் சந்திக்க உள்ளோம். அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் கொரோனாவைக் கட்டுப்படுத்தப் போவதில்லை. இல்-து-பிரான்ஸ் மிகவும் மோசமான நிலையைச் சந்தித்துள்ளது என பரிசின் பிரபல பெரும் வைத்தியசாலையான Pitié-Salpêtrière (AP-HP) இன் அனெஸ்தெசி – மயக்க மீளல் மற்றும் தீவிரக் கண்காணிப்பு (anesthésie-réanimation) பிரிவின் தலைமை மருத்துவரான Jean-Michel Constantin எச்சரித்துள்ளார். இது முதலாவது தொற்றலையின் பாதிப்பை மீறிய பாதிப்பை உருவாக்கும் ஆபத்து உள்ளது. அரசாங்கம் சொல்வது போல் மூன்று மாகாணங்களில் மட்டுமல்லாது, பிரான்ஸ் முழுவதிற்கும் ஆபத்து உள்ளது. அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது போல் இல்லை. வைத்தியசாலைகளின் நிலைமை பேரழிவாகவே உள்ளது. என இவர் தெரிவித்துள்ளமை ஆபத்தின் உண்மை நிலையை விளக்கி உள்ளது.