⚫🇫🇷பிரான்ஸ் அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை Frouard (Meurthe-et-Moselle) நகரில் இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றினை குறித்த அதிரடிப்படை அதிகாரிகள் விசாரித்துக்கொண்டிருந்தனர். கடந்த சில நாட்களாக பலர் கைதும் செய்யப்பட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று காலையும், இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

அதன்போது, அதிரடிப்படையினரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இரண்டு மூன்று தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து, அதிரடிப்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். தாக்குதலாளியை நோக்கி ஒருதடை சுப்பாக்கியால் சுட, நெற்றியில் குண்டு பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே அவர் சாவடைந்துள்ளார் . அதிரடிப்படையினர் எவரும் காயமடையவில்லை.