🔴🇫🇷பிரான்ஸில் தொடர்ந்து மூடப்பட்டுவரும் பாடசாலைகள்!

கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மற்றும் வகுப்பறைகள் தொடர்ந்தும் மூடப்பட்டு வருகின்றன.
இன்று வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 3.299 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மொத்த 527,200 வகுப்பறைகளில் இது 0.63% வீதமாகும். அதேவேளை, இதுவரை 15 பாடசாலைகள் மற்றும் 1 கொலேஜ் ஆகியவை மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 59.650 பாடசாலைகளில் இது 0.027% வீதமாகும்.