♦️🇫🇷பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்! பெண் ஒருவர் அதிரடி கைது!

பேராசியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்தவருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதி பல்கலைக்கழக பேராசிரியர் Samuel Paty, பயங்கரவாதி ஒருவனால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். Abdoullakh Anzorov எனும் பயங்கரவாதி மேற்கொண்ட தாக்குதலில் குறித்த பேராசிரியர் சாவடைந்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், நேற்று ஒருவரை கைது செய்துள்ளனர். Nîmes நகரில் வைத்து 33 வயதுடைய பெண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.