🇫🇷😳பிரான்ஸில் பிரிவினைவாதத்தை தூண்டும் பள்ளிவாசல்கள்! அரசின் அதிரடி!

பிரான்சில் இதுவரை ஒன்பது இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் Gerald Darmanin இது தொடர்பாக தெரிவிக்கும் போது பிரிவினைவாதத்துக்கு எதிராக பிரான்ஸ் தொடர்ந்து போராடி வருகின்றது! பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் 18 பள்ளிவாசல்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

அதில் கடந்த வாரங்களில் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. என உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதில், அண்மையில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசிரியர் Samuel Paty இன் வழக்கில் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்பட்டு நான்கு பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன.

Conflans-Sainte-Honorine (Yvelines).
Montmagny, Goussainville (Val-d’Oise),
Thiers (Puy-de-Dôme) ,
Villeneuve-Saint-Georges (Val-de-Marne) ஆகிய பள்ளிவாசல்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.