🇫🇷பிரான்ஸில் கட்டாயப்படுத்தி பாலியல் தொழில்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

இளம் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய எட்டு நபர்கள் பரிசில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இவர்கள் ஒரு ‘வலைத்தளமாக’ இயங்கிக்கொண்டிருந்ததாகவும், கிட்டத்தட்ட 20 பெண்களை ( அவர்களில் பலர் 18 வயதை அடையாத சிறுமிகள் ) வைத்து பாலியல் தொழில் மேற்கொண்டுவந்ததாகவும், சமூகவலைத்தளங்களூடாக விளம்பரம் செய்து தங்களுக்குரிய வாடிக்கையாளர்களை அவர்கள் அணுகியதாகவும் அறிய முடிகிறது.


கைது செய்யப்பட்ட 8 பேரில் நால்வர் தொடர்ந்தும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர். ஏனையோர் காவல்துறையினரிடன் கண்காணிப்புடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு தொடர்பான விசாரணைகள் கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும், பரிஸ் 15 ஆம் வட்டாரத்தை பிரதான இடமாக கொண்டு அவர்கள் செயற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் மேற்கொண்ட கைது நடவடிக்கையின் போது, வீடுகளும் சோதனையிடப்பட்டிருந்தன. அதன்போது 10.000 யூரோக்கள் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டிருந்தது. குறித்த தொகை அவர்களது ஒருநாள் வருமானம் எனவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.