⚫🇫🇷பிரான்ஸ் மக்களே அவதானம்! எதிர்பாரா பனிப்பொழிவு!!

பிரான்சின் பல்வேறு மாகாணங்களில் எதிர்பாரா திடீர் பனிப்பொழிவு இடம்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை பெப்ரவரி 9 ஆம் திகதி இந்த பனிப்பொழிவு பதிவாகும். வானிலை ஆய்வு மையமான Météo France வெளியிட்டுள்ள தகவல்களின் படி, -15 டிகிரி வரை கடும் குளிர் வரை நிலவும் எனவும், பனிப்பொழிவு இல் து பிரான்ஸ் மற்றும் Hauts-de-France ஆகிய மாகாணங்களில் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக Normandy இல் 15 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.