⚫🇫🇷பிரான்ஸில் ஆர்பாட்டக்காரர்களால் பரபரப்பு!

தொடர்ச்சியான எட்டாவது வாரமாக இன்று சனிக்கிழமையும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. சற்று முன்னர் பரிஸ் சத்தலே வணிக (Châtelet Les Halles) வளாகத்துக்குள் நுழைந்த ஆர்பாட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் தலையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றினர். இந்த திடீர் நுழைவால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு எழுந்தது. இச்சம்பவதின் போது மூவரை காவல்துறையினர் கைது செய்ததாக அறிய முடிகிறது.