⚫🇫🇷பிரான்ஸில் இரகசிய விருந்தால் ஏற்பட்ட நிலை!

பரிசில் நேற்று சனிக்கிழமை இரவு இரகசிய விருந்து ஒன்று இடம்பெற்றது. முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நேரத்தில், எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி இந்த விருந்து இடம்பெற்றுள்ளது. சுற்றுவட்ட வீதியின் அருகே Porte d’Auteuil பகுதியில் இந்த ரகசிய விருந்து இடம்பெற்றுள்ளது. இதில் 100 பேர் வரை கலந்துகொண்டிருந்தனர்.

பின்னர் இந்த விருந்தை பரிசைச் சேர்ந்த காவல்துறையினர் தலையிட்டு இடை நிறுத்தினர். நள்ளிரவு 1.30 மணி அளவில் இந்த விருந்து விழா நிறுத்தப்பட்டது. விழாவை ஏற்பாடு செய்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒலிபெருக்கிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.