⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார பாஸ்! இன்று வெளியான முக்கிய தகவல்!

நெடுந்தூர தொடருந்துகளில் சுகாதார பாஸ் சோதனை நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது. ஓகஸ்ட் 9 ஆம் திகதியில், நெடுந்தூர தொடருந்தில் பயணிப்பதற்கு pass sanitaire எனும் சுகாதார பாஸ் கட்டாயம் என அரசு அறிவித்திருந்தது.

சோதனை செய்யாமல் விட்டாலோ அல்லது சுகாதார பாஸ் இல்லாமல் பயணித்தாலோ அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓகஸ்ட் 9 ஆம் திகதியில் இருந்து இதுவரை தொடருந்தில் பயணித்த பயணிகளில் வெறும் 25% வீதமானவர்கள் மாத்திரமே சோதனையிடப்பட்டுள்ளதாக SNCF மூலம் அறிய முடிகிறது. சோதனையிடப்பட்டவர்களில் 97% வீதமானவர்கள் சுகாதார பாஸ் வைத்திருந்துள்ளார்கள் எனவும் அறிய முடிகிறது.

ஆனால் 25% வீதமான சோதனைகள் மாத்திரமே பதிவாகியுள்ளமை அரசின் இந்த அறிவிப்பின் தோல்வியையே குறிக்கின்றது. போதுமான அளவு ஊழியர்கள் இல்லாததால் இந்த குறைந்த அளவு சோதனைகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.