⚫🇫🇷பிரான்ஸில் போலி சுகாதார பாஸ்! தமிழர்களே உஷார்!

மருத்துவர் ஒருவரின் கணனியை திருடி, சுகாதார பாஸ் தயாரித்த கும்பல் ஒன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்செ நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்செ நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இங்குள்ள மருத்துவர் ஒருவரின் கணனியை Hack செய்து, அதன் வழியாக போலியான QR குறியீடுகளை உருவாக்கி சுகாதார பாஸ் தயாரித்துள்ளார்கள். மொத்தமாக 178 சுகாதார பாஸ் இதுபோல் அவர்கள் தயாரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார பாஸ் கட்டாயமாக்கப்பட்ட நாளில் இருந்து இதுபோன்ற ஏமாற்று மோசடிகள் பலமடங்காக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாஸ் இல்லாமல் சென்றால் €135 யூரோக்களும், இரண்டாம் தடவைக்கு €1.500 யூரோக்களும், மூன்றாம் தடவை அதே தவறைச் செய்தால் €3.750 யூரோக்கள் தண்டப்பணமும் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.